வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (23.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல்திட்டத்தின்கீழ்,ரூ.13.05இலட்சம்மதிப்பில்புனரமைப்புமற்றும்பராமரிப்புபணிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,வலையபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.50 இலட்சம் மதிப்பில், வலையப்பட்டி ஊராட்சி மேற்கு பகுதியில் புதிய ஊரணி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,வலையப்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மற்றும் வலையப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.2.45 இலட்சம் மதிப்பீட்டில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும்,பின்னர், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.30.10 இலட்சம் மதிப்பில், புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.பின்னர், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திருமதி. காளியம்மாள்,தென்னாட்டான் என்பவருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வத்திராயிருப்பு வட்டாட்சியர்; திருமதி சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி மீனாட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திருமதி.லலிதா, பொறியாளர்கள் திருமதி வள்ளிமயில், திரு.ராஜகுமார், மேற்பார்வையாளர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply