விருதுநகர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
விருதுநகர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (06.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் நகராட்சி தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பில் புதிய வகுப்பறையுடன் கூடிய வேதியியல் ஆய்வகம் கட்டப்பட்டு வருவதையும்,பாவாலி சாலை நகராட்சி முஸ்லிம் பள்ளியில் ரூ.90.50 இலட்சம் மதிப்பில் மூன்று வகுப்பறைகள் மற்றும் சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கு உள்ள அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, நகராட்சி பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் ஸ்கேட்டி யார்டு அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு உள்ள பூங்காவில் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.இந்த ஆய்வின் போது, வருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் திருமதி பி.தமிழ்செல்வி, நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
0
Leave a Reply