"தமிழ் புதல்வன்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை(
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (09.08.2024) கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து,விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைத்து, 8431 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் புத்தகம் அடங்கிய "தமிழ் புதல்வன்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை(Debit Card)களை வழங்கினார்கள்.
தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதுமைப் பெண் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய சூழலுக்கேற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் சமூகநலன் மற்றும் மகளிர்; உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு மாணவியருக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டமானது தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 5968 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று மாதாந்திரம் ரூ.1000/- அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து, தற்போது ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ் புதல்வன் என்னும் மாபெரும் திட்டமானது 09.08.2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இத்திட்டத்திற்காக 2024-2025 ஆம் நிதியாண்டில் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று, கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட 50 கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வரும் 8431 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம்தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.
0
Leave a Reply