அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
2024-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற் பிரிவுகளில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 17.10.2024 முதல் 30.10.2024 வரைசேர்க்கை நடைபெறுகிறது.ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப்பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ / மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம்.
அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி நேரடிசேர்க்கை மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம்.அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, 2 செட் சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், மூடு காலணி, இலவசபஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்திர உதவித்தொகை ரூ.750/- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகைவழங்கப்படும்.
தகுதியான மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர் பயிற்சிமுடிவில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply