வெயிலின் கருமை நீங்க.....
வெள்ளரிக்காய், கற்றாழை, வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளிக்க கருமை நீங்கும்.
ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கி அதனுடன் முல்தானிமட்டி, சந்தனம், தயிர் கலந்து முகத்தில் பேக் போட்டு கழுவ கருமை போகும்.
இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், இரண்டு ஸ்பூன் பால், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்கலந்து முகத்தில் பூசி20-நிமிடம் பின் கழுவ வேண்டும்.
சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். எலுமிச்சை மற்றும் தேன்: இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில், இரண்டு ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.
0
Leave a Reply