25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு.

பச்சை நிறத்தில் பளபளப்பான தோலுடன் காணப்படும். இதனால் பச்சை மாப்பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது.கிரைசோபீலியா வகையை சேர்ந்த உயிரினம் பறக்கும் பாம்பு. கோலுகிர் நிறைந்தது.இது1.5 மீட்டர் வரை நீளமாக இருக்கும். மரங்களில் வாழும். உடல் மெலிந்து, செதில்கள் மென்மையாக இருப்பதால் மரங்களில் எளிதாக ஏற முடியும். பல்லி தவளை, சிறு பறவைகள், பூச்சிகளை உணவாக்கும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா கண்ட பகுதியில் இந்தியா இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இவை காணப்படுகிறது.

விஷமற்ற இந்த பாம்பு இனம் மரங்களுக்கு இடையே பறக்கும் திறனுடையதாக கருதப்படுகிறது. உண்மையில் இது பறப்பதில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். மாறாக, உடலை தட்டையாக்கி, காற்றில்100 மீட்டர் தூரம் வரை சறுக்கி செல்லும் திறன் உடையது. முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.

இந்த இனத்தில் கிரைசோபீலியா ஓர்னேட்டா என்ற வகையும் உள்ளது. இது, அலங்கார பறக்கும் பாம்பு என அழைக்கப்படுகிறது. மஞ்சள் கோடுகளுடன் அழகிய தோற்றம் கொண்டது. இந்த பாம்பு இனம், மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பதுங்கி வாழும் தன்மை கொண்டது. இயற்கையின் அற்புத படைப்புகளில் இவையும் ஒன்றாக கருதப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News