கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம், கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் (11.07.2024) புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாய்மை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் திறந்து வைத்தார்.
கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் பங்களிப்போடு, உள்கட்டமைப்பு முன்னேற்ற பணிகள், மருத்துவ வசதிகள் மேம்படுத்துதல், அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், நோயாளிகளின் தங்கும் இடம், மருத்துவமனையின் சூழல் மற்றும் வளாகத்தை பசுமையாக பராமரித்தல் போன்ற பணிகள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக இன்று வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பங்களிப்போடு அமைக்கப்பட்ட தாய்மை பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்;.
இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும், மகப்பேறு அடையும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த சுகாதார நிலையத்தில் உள்ள தாய்மை பூங்காவானது ஒரு அழகான சூழ்நிலையில் நல்ல மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பின்னர், கன்னிச்சேரி புதூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மகப்பேறு பிரிவில் மகப்பேறு பெற்று சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களுக்கு குழந்தை பெற்றதும் தனது குழந்தையுடன் இருக்கும் முதல் புகைப்படத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், கன்னிச்சேரி புதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.பி. ஆரோக்கிய ரூபன் ராஜ், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply