சமூக நீத்துறை அமைச்சர் அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
சமூக நீத்துறை அமைச்சர் திரு.ர.வன்னிஅரசு அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் காரியாபட்டி வட்டம், அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கு(02.11.2026) அடிக்கல் நாட்டினார்கள்.
தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வியினை பாதுகாக்கப்பட்ட சூழலில் கற்றிட வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அயன் ரெட்டியாபட்டி அரசு துவக்கப்பள்ளியானது நான் கல்வி பயின்ற பள்ளி ஆகும்.தமிழக அமைச்சரவையின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் பிறந்த ஊரான அயன்ரெட்டியாபட்டிக்கு நான் வந்த போது பெரும்பான்மையான பொதுமக்கள் என்னிடம் வைத்த கோரிக்கை இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும் என்பது தான். அதனை நிறைவேற்றிடும் விதமாக ஆதிரை அறக்கட்டளையின் மூலம் அதனை நிறைவேற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நான், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஆகியோர் தமிழ் வழியில் பயின்றவர்கள் தான். அரசுப்பள்ளியில் பயின்றால் உயர்ந்த நிலையினை அடைந்திட முடியாது என்ற தவறாக எண்ணத்தினை விடுத்து பெற்றோர்கள் தங்களது குழுந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து பயில வைக்க வேண்டும்.
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசின் திட்டங்களை பெறுவதற்கு சாதிச்சான்றிதழ் மிகுந்த அவசியமானதாகும். அதை அனைவருக்கும் கிடைத்துள்ளதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு இணையவழி பட்டா பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதனை விரைந்து அதற்கு தீர்வு காண்டு உரியவர்களுக்கு இணையவழி பட்டா கிடைப்பதனை துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என சமூக நீதித்துறை அமைச்சர் திரு.ர.வன்னிஅரசு அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக பொதுமக்களை உற்ற உறவுகளாக எண்ணி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை குறைந்த காலத்திலேயே ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பல்வேறு கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். கூடிய விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தருவார்.
பெற்றோர்கள் பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் கூடா தொடுதல் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் பள்ளி செல்லும் மாணவர்களை முறையாக தலைவாரி செல்ல அறிவுறுத்த வேண்டும். சீருடையில் கால்சட்டையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அணிந்து செல்ல அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை சமூக பொறுப்புகளுடன் வளர்க்கும் பட்சத்தில் மாணவர்கள் வழிமாறி செல்ல மாட்டார்கள். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் கண்காணித்து வழிநடத்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டுகளில் முதல் இடங்களில் இருந்து வந்த நிலையில் தற்போது அதில் சிறு தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்து கல்வி என்றாலே விருதுநகர் மாவட்டம் தான் என்ற உயர்ந்த நிலையினை அடைந்திட ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது கல்வி தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, அயன்ரெட்டியாபட்டியில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்து அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், திருச்சுழி வட்டாரக் கல்வி அலுவலர் திரு.செல்வக்குமார், அயன்ரெட்டியாபட்டி முன்னாள் பள்ளி மாணவர் திரு.வீரபாண்டியன், ஆதிரை அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply