025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.32019.52 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (26.06.2025) 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.32,019.52 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 318 வங்கிக் கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கான 2025-26 நிதியாண்டிற்கான கடன் திட்ட இலக்கு நிர்ணயித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது.இந்த கடன் திட்டங்களில் இலக்கானது அனைத்து வங்கிகளின் கடந்த நிதி ஆண்டின் நிதி நிலைமையின் அடிப்படையிலும், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட இலக்கினையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலரின் அறிவுறுத்தல்படி இந்த ஆண்டு கடன் திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் கடன் இலக்காக ரூபாய் 32019.52 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக ரூபாய் 20,475.91 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் இலக்கானது கடந்த நிதியாண்டின் இலக்கை விட ரூபாய் 2846.76 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாய கடனுக்காக ரூபாய் 13290.90 கோடியும், தொழில் வளர்ச்சிக்காக ரூபாய் 6582.97 கோடியும், கல்விக் கடனாக ரூபாய் 38.11 கோடியும், வீட்டுக் கடனாக ரூபாய் 204.11 கோடியும், சமூக கட்டமைப்பு கடனாக ரூபாய் 1.40 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூபாய் 3.47 கோடியும், நலிவடைந்தோர் வளர்ச்சி கடனாக ரூபாய் 8556.01 கோடியும், பிற முன்னுரிமை கடனாக ரூபாய் 319.79 கோடியும் மற்றும் மற்ற கடன்களாக ரூபாய் 11543.62 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்த முன்னுரிமை கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 64.91 சதவீதமும், தொழில் வளர்ச்சிக்கு 32.14 சதவீதம் மற்றும் இதர கடன்களுக்கு 2.95 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டமானது வட்டார அளவிலான வங்கி கிளைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்படும்.மேலும் இந்த கடன் இலக்கினை முறையாக செயல்படுத்திட மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டமும் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை முன்னோடி வங்கி மேலாளரின் தலைமையில் வட்டார அளவிலான வங்கியாளர்கள் கூட்டமும் நடத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படும். மேலும் மாதம் ஒருமுறை கடன் வழங்கும் விழா மாவட்ட அளவில் நடத்தப்படும். சரியாக செயல்படாத வங்கிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் திரு.தர்மராஜ், விருதுநகர் மாவட்ட நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் திருமதி அனுசுயா எலிசபெத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் திரு. புலுசு வெங்கடரமண ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ரா.பாண்டிச்செல்வன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply