வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவுபெற்றது என மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் தகவல்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெற்று, மேற்படி தேர்தலில் பதிவான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணிக்கை செய்யப்பட்டு, தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிப்பு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தமுள்ள 269 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளின் அடிப்படையில், வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது இடம் பிடித்த திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.தங்கபாண்டியன் என்பவர், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணிகளுக்காக உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளார்.
அதன்படி, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.தங்கபாண்டியன் அவர்களால் குறிப்பிடப்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியானது பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் குழுவினரால், தொடர்புடைய வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் 29.07.2026 (புதன்கிழமை) முதல் 03.08.2026 (திங்கள்கிழமை) வரை நடைபெற்றது.
மேலும், சரிபார்ப்புப் பணிகளின் போது தொடர்புடைய வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செய்யப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திர மாதிரி வாக்குப்பதிவு முடிவுகள், VVPAT இயந்திரத்தில் உள்ள சரிபார்ப்புச் சீட்டுகளுடன் (VVPAT Slip) ஒப்பிடப்பட்டு, இரண்டு முடிவுகளும் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி சரியாக உள்ளது என பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் குழுவினரால் தொடர்புடைய வேட்பாளரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்யப்பட்டது.
இச்சரிபார்ப்பு நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து இயந்திரங்களும் (Checking and Verification passed) பெற்றன. EVM/VVPAT- burnt memory/microcontoller-ல் எந்தவிதமான மாற்றமோ அல்லது முறைகேடோ இல்லை என்று BEL பொறியாளர் சான்றளித்துள்ளார். மேலும், அதன் நகலானது மனுதாரரின் பிரதிநிதியிடம் வழங்கப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply