கிரிக்கெட் பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை பைனலுக்குஇந்திய அணி முன்னேறியது.
பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்இந்தியா, இலங்கைவில், நடக்கிறது.இதன் பைனலுக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று, நடந்த 2வது அரையிறுதியில் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஒவரில் 338 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 48.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி 3வது முறையாக (2005, 2017, 2025) உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது.
0
Leave a Reply