விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ வசதி பிரிவுகளை அமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (26.02.2026) மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ வசதி பிரிவுகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அதன்படி, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி சிறப்புக் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உணர்வுத் திறனை மேம்படுத்தும் வகையில் உணர்வு திறன் சார்புப் பூங்கா (Sensory Integration Park) அமைக்கப்பட்டுள்ளது. ஃபுளூரோஸ்கோபி (Fluoroscopy) 800 எம்.ஏ (800 mA) திறன் கொண்ட அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி அமைக்கப்பட்டுள்ளது. இது துல்லியமான நோய் கண்டறிதலுக்கு உதவும்.மேலும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க உங்களுக்கு உதவலாமா?" (May I Help You?) உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3 புதிய மருத்துவ வசதி பிரிவுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெய்சிங், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.மாதவன், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply