25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைஅமைச்சர் அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைஅமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (14.03.2026) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் தலைமையில், 37 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.96 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்களையும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.2.25 இலட்சம் திருமண உதவித்தொகைகளையும்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.

 முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று 37 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,08,000/- வீதம் மொத்தம் ரூ.39.96 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயமும் மற்றும் மொத்தம் ரூ.2.25 இலட்சம் திருமண உதவித்தொகைகளையும் என ஆக மொத்தம் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.21 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆம் நிதி ஆண்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 360 நபர்களுக்கு ரூ.3.89 கோடி மதிப்பிட்டில் வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு ரூ.8,75,000/- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைகள் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசுக்கு அனைவரும் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.செந்தில், உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News