விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பொது மக்களின் நலன் கருதி முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர இயக்கப்படும் வழித்தடங்கள்
விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் பொது மக்களின் நலன் கருதி 21.08.2024 அன்று முதல் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, விருதுநகர் கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தினை இன்னும் சிறப்பாக பயன்பாட்டில் கொண்டுவரும் வகையில் சிவகாசி முதல் மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும், விருதுநகர் முதல் திருமங்கலம், மதுரை மார்க்கமாக செல்லும் நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் / மீனாம்பிகை பங்களா வழியாக மதுரை செல்வதற்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த நடைமுறையானது நாளை 16.10.2024, முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
வழித்தடங்கள்:
விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம்,(நகர் பேருந்துகள்)
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - பழைய பேருந்து நிலையம் - கள்ளிக்குடி - வழியாக திருமங்கலம் செல்ல வேண்டும். மீண்டும் திருமங்கலத்திலிருந்து அதே வழித்தடத்தில் திரும்பவும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
விருதுநகர் முதல் கள்ளிக்குடி, திருமங்கலம், மதுரை மார்க்கம். ( புறநகர் பேருந்துகள்)
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் - எம்ஜிஆர் சிலை - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா - கள்ளிக்குடி - திருமங்கலம் - மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் மதுரையிலிருந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும்.
சிவகாசி முதல் மதுரை மார்க்கம் (புறநகர் பேருந்துகள்)
சிவகாசி - நந்தா ஹோட்டல் - புறவழிச்சாலை - எம்ஜிஆர் சாலை - புதிய பேருந்து நிலையம் - கருமாதி மடம் - ஆத்துப்பாலம் - மீனாம்பிகை பங்களா - கள்ளிக்குடி வழியாக மதுரை செல்ல வேண்டும். மீண்டும் மதுரையிலிருந்து அதே வழித்தடத்தில் சிவகாசி செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply