பாரிஸ் பாராலிம்பிக்போட்டி இன்று வண்ணமயமான விழாவுடன் ஆரம்பமாகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிமபிக் போட்டி இன்று துவங்குகிறது. இன்று முதல் ஆரம்பித்து செப்டம்பர் 8ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 12 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில் 169 நாடுகளை சேர்ந்த 440 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 84 பேர் 12 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் ஏந்தி வர உள்ளனர்.
பிரான்சின் மையப்பகுதியில் பிளேஸ் டி லா கான்கார்ட் சதுக்கத்தில் துவக்க விழா நடக்க உள்ளது. முதன் முறையாக திறந்த வெளியில் பாராலிம்பிக் துவக்க விழா நடக்க உள்ளது. 65,000 பேர் அமர்ந்து ரசிக்க உள்ளனர். பாராலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்.
பாராலிம்பிக் போட்டிகள் மனிதர்களின் மனஉறுதி., விடா முயற்சியை நிருபிக்கும் களம் விபத்தில் பாதிப்பு, பிறவியில் குறைபாடு பார்வைதிறன் இல்லாதது என ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் வாழ்விலும் ஏதாவது ஒரு சோகம் நிறைந்திருக்கும் இதிலிருந்து லட்சியத்துடன் போராடி முன்னேறியுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றனர்.
0
Leave a Reply