விருதுநகர் மாவட்ட மக்கள் போலியான முகநூல் அல்லது இணையவழி பணம்கேட்டாள் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விருதுநகர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி. கடந்த சில தினங்களாக நமது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி, அதன் மூலம் பணம் கேட்பதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
இது முற்றிலும் இணையவழி திருடர்களின் வேலையாகும். ஏற்கனவே இதுபோன்ற பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி அதன்மூலம் பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
இதுபோன்ற போலியான முகநூல் பக்கத்திலிருந்து யாராவது பணம் கேட்டாள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் இணைய வழியாக யாரேனும் கடன் தருவதாகவோ, பரிசு விழுந்துள்ளதாகவும் அதற்கு முன்பணம் கட்டவேண்டும் என்றோ, வெளிநாட்டிலிருந்து பரிசு வந்துள்ளது.
அதனை விமான நிலையத்தில் சுங்ககட்டணம் கட்டி வாங்கிக்கொள்ள பணம் அனுப்புமாரோ யாரேனும்; தொலைபேசி வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ யாரேனும் தொடர்புகொண்டாள் அதனை நம்பவேண்டாம். இவை அனைத்தும் இணையவழி திருடர்களின் வேலையாகும்.எனவே விருதுநகர் மாவட்ட மக்கள் இதுபோன்ற போலியான முகநூல் அல்லது இணையவழி பணம்கேட்டாள் யாரும் நம்பி பணம்அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0
Leave a Reply