மக்கள் தொடர்பு திட்ட முகாம் 12.08.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
மக்கள் தொடர்பு திட்ட முகாம் 12.08.2026 அன்று இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையம் வருவாய் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், வருகின்ற 12.08.2026 அன்று இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையம் வருவாய் கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன. பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெறலாம். ஏற்கனவே, பெறப்பட்ட மனுவின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியுள்ள மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
0
Leave a Reply