25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


இராஜபாளையத்தின் அடையாளம் நமது முன்னாள் முதல்வர் திரு பி.எஸ்.கே.ராஜா அவர்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையத்தின் அடையாளம் நமது முன்னாள் முதல்வர் திரு பி.எஸ்.கே.ராஜா அவர்கள்.

 வணக்கம் நண்பர்களே & சமூக ஆர்வலர்களே!! 

இராஜபாளையத்தின் அடையாளம் நமது முன்னாள் முதல்வர் திரு பி.எஸ்.கே.ராஜா அவர்கள்.

 அவரின் ஆட்சியில் தான் இராஜை தொழில் நகரமாக மாறத் தொடங்கியது

 பல சாதனைகள் தமிழகத்திற்க்கும், இராஜபாளையம் ஊருக்கும் செய்த உன்னதத்தலைவர் அவர்களை நாம் கௌரவிக்க தவறிவிட்டோம்

மத்திய அரசு பாரத ரத்னா, பத்ம விபூசண் போன்ற விருதுகள் வழங்கவில்லை.

மாநில அரசு சட்ட சபையில் PSK படத்தினை திறந்து வைக்கவில்லை. 

மற்ற எல்லா தமிழக முன்னாள் முதலமைச்சர் படங்கள் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து சமுதாயமும் கோரிக்கை வைத்தும் 

போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை.

புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/கலெக்டர் அலுவலகத்தில் PSK படம்/மார்பளவு சிலை வைக்க படவில்லை. மற்ற தலைவர்கள் சிலைகள் வைத்துள்ளனர்.

கோரிக்கைகள்/விண்ணப்பம் கொடுத்தும்  PSK சிலை வைக்கப்படவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.

கலைஞர் ஆட்சியில் சென்னையில் உள்ள சாலைக்கு PSK பெயர் சூட்டப்பட்டது, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் PSK வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டது.

இராஜபாளையம் PSK நூற்றாண்டு  நினைவு  திருமண மண்டபம் கலைஞர் திறந்து வைத்தார்.

 இராஜபாளையம் பேரூந்து நிலையத்திற்கு PSK பெயர் வைத்தனர்.

தமிழக அரசு சின்னம் உருவாக்கியவர், கதர் இயக்கம் முன்னெடுத்தவர், முதல் காதி வஸ்திராலயம்       

இராஜபாளையத்தின் தியாகி PSK, தன் முழு சொத்துக்களை பொது காரியங்களுக்காக கொடுத்த வளாளல்பெருமான். அவர்கள் திருவுருவப்படத்தை   சட்டசபையில் திறக்க யாருக்கும் மனம் வராதது வேதனையான விஷயம்.

 மற்ற முன்னாள் தலைவர்களுக்கு அரசு விழா எடுத்து கொண்டாடுகின்றனர், ஆனால் திரு PSK அவர்களுக்கு அரசு விழா நடத்துவதாக தெரியவில்லை.

ஒவ்வொரு தமிழக குடிமகனும்,  முதன்முதலில் தமிழக முதல மைச்சராக விளங்கிய   PSK  அவர்களுக்கு நாம் தர வேண்டிய  மரியாதை தராதது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம்.

நாம் அனைவரும் ஒன்று கூடி போராடினால் தான் இவ்விசயம் நடைபெறும்.

முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்.

அதற்கான அவசர நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்.

  போராடுவோம் !!

.உறுதியாக வெற்றி பெறுவோம் !!

விரைவில் களத்தில் இறங்கி போராட ஆரம்பிப்போம்

 உங்கள் மேலான ஒத்துழைப்பு அவசியம் நல்கிட வேண்டும்.

இந்த முக்கிய  செய்தியினை அனைவருக்கும் பகிறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 நன்றி, வாழ்த்துக்கள்..

        இப்படிக்கு, 

முன்னாள் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், 

சர்வ சமுதாய கூட்டமைப்பு 

  இராஜபாளையம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *