25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் (06.02.2026) காணொலி காட்சி வாயிலாக, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.40 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், இராஜபாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தில் மருத்துவ  சேவையினை குத்துவிளக்கேற்றி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் 4 தளங்களுடன் மொத்தம் 9118 ச.மீ  பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

 அதன்படி தரைத்தளத்தில், பொது மருத்துவ வெளி நோயாளி பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இ.சி.ஜீ பரிசோதனை மையம், மைய நீராவி தொற்று நீக்கும் பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவும்,முதல் தளத்தில், அறுவை அரங்குகள் (3 எண்ணம்), எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, முதியோர் மருத்துவ பிரிவு, கண்காணிப்பு பிரிவு, குழந்தை மருத்துவ வெளிநோயாளி பிரிவு, மயக்கவியல் பிரிவும், இரண்டாம் தளத்தில், ஆண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி மற்றும் தொற்று நோள் ஆய்வகமும், மூன்றாம் தளத்தில், பெண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, பெண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும், நான்காம் தளத்தில், பெண்கள் அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் என்பது கிராமப்புற மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் உள்ளது. மருத்துவ சேவைகளுக்கு குறிப்பாக உயர் மருத்துவ சேவைகளுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்தது. தற்போது இந்த பகுதியிலேயே இராஜபாளையம் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான கட்டட வசதிகள், உபகரணங்கள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும். இதனால் இப்பகுதி மக்கள் விருதுநகர் வரை செல்லாமல் அருகிலேயே உள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளை பெற முடியும். இதனால் நேரமும், பண விரயமும் மிச்சமாகும் என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.செந்தில்குமார், சீர்மரபினர் வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, இராஜபாளையம் நகர்மன்றத்தலைவர் திருமதி பவித்ரா ஷ்யாம், மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News