25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட   கிறிஸ்தவ மதத்தினை சேர்ந்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மதத்தினை சேர்ந்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் .

தமிழ்நாட்டைச் சேர்ந்த   அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்துவர்கள் பயனடையும் வகையில் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்டு   திரும்பும்   550     கிறித்துவர்களுக்கு    நபர்   ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும்   50 கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு   ரூ.60,000/-வீதமும்   ECS   முறையில்    நேரடியாக  மானியம்  வழங்கும் திட்டத்தின்  கீழ்  நடப்பு  ஆண்டில்  ஜெருசேலம்  புனித  பயணம் மேற்கொண்டு திரும்பும் கிறித்துவ மத பயனாளிகளிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவத்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்   நல அலுவலகத்திலிருந்து (5-வது தளம், அறை எண்-505) கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.01.2027-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி -ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால்  பராம்பரிய  கட்டடம், முதல்தளம்,  சேப்பாக்கம், சென்னை – 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News