TNPL: கோவை அணிக்கு 4வது வெற்றி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த கோவை அணி, 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
இலக்கை துரத்திய திண்டுக்கல் அணி, 13.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் தனது 4வது வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply