டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேலத்தை வீழ்த்தியது மதுரை அணி.
திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் மதுரை, சேலம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.
சவாலான இலக்கை துரத்திய சேலம் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் மதுரை அணி வெற்றி பெற்றது.
0
Leave a Reply