சென்னை ஓபன் டென்னிஸ்: மாக்டா லினெட் சாம்பியன்!
சென்னையில் நடைபெற்ற மகளிருக்கான ‘டபிள்யு.டி.ஏ 250’ சென்னை ஓபன் டென்னிஸ் 3வது சீசனின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி, கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இதில் போலந்தின் மாக்டா லினெட் மற்றும் இந்தோனேசியாவின் ஜானிஸ் டிஜென் மோதினர்.
முதல் செட்டை ஜானிஸ் டிஜென் 7-5 எனக் கைப்பற்றினாலும், அதன்பின் ஆதிக்கம் செலுத்திய மாக்டா லினெட் 2வது செட்டை 6-1 என எளிதில் வென்றார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டையும் 6-4 எனக் கைப்பற்றினார். 2 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மாக்டா லினெட், முதன்முறையாக சென்னை ஓபன் கோப்பையைத் தட்டிச் சென்றார்.
0
Leave a Reply