மூளைக்குள் கட்டி (Brain Tumor) நோய் வருவதைத் தடுக்க.....
உடலின் மற்ற பாகங்களில் வரும் நோய்களை விட மூளைக்குள் ஏதாவது பிரச்னை என்றால் அதைக் குணப்படுத்துவது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. மூளைக்குள் கட்டி(BrainTumor) என்ற அபாயகரமான நோய் வருவதைத் தடுக்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் . ஒரு நோய் வந்த பின் அதைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பதே நலம்
அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி, ராஸ் பெரி, பிளாக் பெரி போன்ற பெரி வகைப் பழங்கள்.லைக்கோபீன் என்றொரு கூட்டுப்பொருள் தக்காளியில் மிக அதிகம் உள்ளது. இது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
காலிஃபிளவர், புரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காக்க மிக அதிக அளவில் உதவி புரிபவை.
மூளை ஆரோக்கியத்தை அதிகளவு மேம்படுத்தவும், ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவக் கூடியது மஞ்சள் என்ற மசாலாப் பொருள்.
பீன்ஸ் காயானது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளதோடு, ஏற்கெனவே கேன்சர் நோயாளியாயிருந்து குணமான ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த் தாக்குதல் வராமலிருக்கவும் பாதுகாப்பளிக்கிறது.
பாதாம், வால் நட், பிஸ்தா போன்ற தாவர விதைக் கொட்டைகள் மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடியவை. மேலும் மூளையில் உண்டாகும் வேறு எந்தவிதமான கோளாறுகளுக்கும் தீர்வு அளிக்கும் வல்லமையும் கொண்டவை .
மூளை உள்பட, உடலின் எந்த பகுதியிலும் உற்பத்தியாகும் கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கக்கூடிய சக்தி பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற பொருளுக்கு உண்டு.
மூளைக்குள் கேன்சர் செல் வளர்வதைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது ஃபிளாக்ஸ் விதைகள் (Flax seeds).
மூளைக்குள் கட்டி(BrainTumor) நோய் வருவதைத் தடுக்க உணவுகளைத் தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நம் மூளை மற்றும் உடலின் ஆரோக்கியம் காப்போம்.
0
Leave a Reply