தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரம் மற்றும் இதர ஆற்றல் மூலங்களை சரியான முறையில் சிக்கனமாக உபயோகப்படுத்துவதற்கான பயிற்சி முகாம்
தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவைக் குறைத்து, இலாபத்தை அதிகரிப்பதற்கு மின்சாரம் மற்றும் இதர ஆற்றல் மூலங்களை சரியான முறையில் சிக்கனமாக உபயோகப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 41 சதவீதத்தை தொழில் நிறுவனங்களே உபயோகப்படுத்துகின்றன. எனவே தொழில் நிறவனங்களின் மின் நுகர்வை முறைப்படுத்தி சிக்கனப்படுத்துவது அவசியமானதாகும். பெரும் தொழில் நிறுவனங்கள் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாரத்தை அளவீடு செய்து ஆற்றல் தணிக்கையாளர்களைக் கொண்டு ஆண்டுதோறும் ஆற்றல் தணிக்கை செய்வது கட்டாயமாகும்.
ஆனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக, ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவுகளில் 75 சதவீதத்தை தமிழ்நாடு அரசு மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலமாக திரும்ப அளிக்கிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவில் பெரும்பகுதி அப்பொருளை உற்பத்தி செய்யும் மின்சாரம் மற்றும் இதர ஆற்றல் மூலங்களுக்கு செலவாகிறது.
எனவே தமிழ்நாடு அரசு ஆற்றல் தணிக்கை வல்லுநர்களைக் கொண்டு தொழில் நிறுவனங்களின் இயந்திரவியல், மின்னியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் இயந்திர பராமரிப்புப் பணியில் உள்ள மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ஆற்றல் சேமிப்பிற்கான பயிற்சிகளை மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக நடத்த 2021 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்திருந்தது.அதன்படி இவ்வாண்டிற்கான முதல் பயிற்சி கடந்த மாதம் ஆகஸ்ட் திருச்சுழி பகுதியில் உள்ள நூற்பாலை வளாகத்தல் நடைபெற்றது. இரண்டாவது பயிற்சி செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில்; நடைபெற்றது.
மத்திய அரசின் BUREAU OF ENERGY EFFICIENCY அங்கீகாரம் பெற்ற ஆற்றல் தணிக்கையாளரான திரு. செந்தில்குமார் மற்றும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் திரு. சரவணன் ஆகியோர் தொழில் நிறுவன பிரதிநிதிகளுக்கு ஆற்றல் சிக்கனம் குறித்து பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியானது தொடர்ந்து செப்டம்பர் 5 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
முன்னதாக இப்பயிற்சியில் விருதுநகர் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதுநிலை தலைவர் திரு. பிருந்தாவன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு. இராமசுப்பிரமணியன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் (பயிற்சி) திரு. ரவி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் செல்வி. கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மின்சார சேமிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு அரசு ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பை மேம்படுத்தும் திட்டத்தை (PEACE) 2021 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஆற்றல் தணிக்கை செய்து ரூபாய். 42 இலட்சம் அளவில் மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆற்றல் தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை களைந்து மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் இயந்திரங்களை நிறுவுபவர்களுக்கு அதற்கான செலவில் 50 சதவீதம் வரை மானியமாக திரும்ப வழங்கப்படும் எனவும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply