முதன்முறையாக இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ!
டெல்லியில் நடைபெறவுள்ள குவாட் (Quad) அமைப்பின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ முதன்முறையாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
முக்கிய நோக்கங்கள்:
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துதல்.
- இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துதல்.
தற்போதைய உலக அரசியல் சூழலில், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை ,அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, இவரின் இந்தப் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
0
Leave a Reply