25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


.வெஜ் கபாப்,
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.வெஜ் கபாப்,

தேவையான பொருட்கள் –
4 உருளைக்கிழங்கு,2 டேபிள்ஸ்பூன் கேரட்,
2 டேபிள்ஸ்பூன் பீன்ஸ்,2 டேபிள்ஸ்பூன் குடைமிளகாய்,
2 வெங்காயம்,1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
1/4 ஸ்பூன் சில்லி சாஸ்,1ஸ்பூன் தக்காளி சாஸ்,
1/2 ஸ்பூன் சோயா சாஸ்,1/8 ஸ்பூன் மிளகாய் தூள்,
 1/4 ஸ்பூன் சீரகத்தூள்,1/4 ஸ்பூன் மல்லித் தூள்,
1/4 ஸ்பூன் சாட் மசாலா தூள்,1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்,
2 சிட்டிகை பெருங்காயத்தூள்,உப்புதேவையான அளவு,
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தழை.
 
மாவு கரைக்க - 2 டேபிள்ஸ்பூன் மைதா,2 ஸ்பூன் கார்ன் ப்ளார்,
1/2 ஸ்பூன் அரிசி மாவு ,உப்பு ஒரு சிட்டிகை

 

மேற்புறம் கோட்டிங் செய்ய -
1/2 கப் ப்ரட் க்ரம்ஸ்,எண்ணெய் பொரிப்பதற்கு.


செய்முறை –
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பொடித்து கொள்ளவும், காய்கறிகளை மிகவும்
பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .வெங்காயம்
வதங்கியதும் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள்,சாட் மசாலா தூள், பெருங்காயத்தூள், மல்லித்தூள்,
சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் சில்லி சாஸ் ,தக்காளி சாஸ் ,சோயா சாஸ், சேர்த்து வதக்கவும். வேகவைத்த கார்ன் சேர்த்து
நன்கு வதக்கி, பொடித்த கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் சேர்ந்து வரும் போது இறக்கி ஆறவிட்டு பிசைந்து கைகளில் சிறிது எண்ணெய் தடவி
கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.
மாவு கரைசல்: மைதா, கார்ன் ப்ளார் ,அரிசி மாவு ,ஆகியவற்றை உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு
தண்ணீராக கரைத்து கொள்ளவும்.
மற்றொரு தட்டில் அதனுடன் ப்ரட் க்ரம்ஸ் சேர்த்து நன்கு கலந்து தனியாக எடுத்து
வைக்கவும்உருட்டிய கலவையை மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸ் ல் புரட்டி எடுக்கவும்.
தனியாக அடுக்கி பிரிட்ஜில் 1 மணி நேரம் வரை வைக்கவும்.பின் சூடான எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.மிதமான தீயில் வைத்து நிதானமாக பொரித்து
எடுக்கவும்.தக்காளி கெட்சப் உடன் சூடாக பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News