வெஜ் ரோல் தோசை
தேவையான பொருட்கள் -
2 கரண்டி தோசை மாவு, 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,
2 ஸ்பூன் குடை மிளகாய் பொடியாக நறுக்கியது,4 ஸ்பூன் துருவிய சீஸ்,
3 ஸ்பூன் துருவிய கேரட்,சில்லி ப்ளேக்ஸ் கால்ஸ்பூன்,3 ஸ்பூன் தக்காளி சாஸ்.
செய்முறை -
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி சற்று
மொத்தமான தோசையாக வார்த்து கொள்ளவும். ஒருபுறம் நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு
மற்றொருபுறம் நன்றாக வேகவிடவும்.
ஒரு ஸ்பூன் ஆயில் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.
இருபுறமும் வெந்தவுடன் தோசையின் உள்பகுதியில் தக்காளி சாஸ் தடவவும் .பின்பு வெங்காயம்,
கேரட், குடை மிளகாய் ,ஆகியவற்றை ஒவ்வொன்றாக தூவவும். அதன்பின் இறுதியாக சீஸை
தூவி அடுப்பை அணைத்து விடவும்.இளம் சூட்டிலேயே தோசையை ரோல் செய்து குறுக்கில்
வெட்டி பரிமாறவும்.
0
Leave a Reply