விருதுநகர் மாவட்டம் நீர் நிலைகளில் குழந்தைகளை விடவேண்டாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் .அவர்கள் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் சமீபகாலங்களில் நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள் .விருதுநகர் மாவட்டத்தில் கோடைகாலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கோடை விடுமுறையில் மாணவ/மாணவிகள் எவ்வித பாதுகாப்புமின்றி நீர்நிலைகள் அருகிலோ அல்லது குளிக்கவோ கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. கல்குவாரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பிய குட்டைகள் அருகே குழந்தைகளை விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இடி மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயத்தை மக்கள் குறைத்து மதிப்பிடுவதாலும், விழிப்புணர்வு இல்லாததாலும் மனித உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிகமாக ஏற்படுகின்றன. மழைபெய்யும் போது இடி மின்னல் நேரங்களில் பொதுமக்கள் கைபேசி ஃ தொலைபேசியினை உபயோகிக்க வேண்டாம். இடி சப்தம் கேட்கும் போது முற்றிலும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மின்னல் ஏற்படும் போது கால்நடைகளை மரத்தடியில் கட்டுவதை தவிர்க்க வேண்டும். உயர் மின்தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்ச 50 அடி தூரத்தில் இருப்பது நல்லது. வெட்ட வெளியில் உலோக பொருட்களை மின்னல் ஏற்படும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிறிய அளவு மின்சாரத்தை உணரும் போதோ, உடலில் உள்ள உரோமங்கள் சிலிர்க்கும் போதோ அல்லது உடல் கூச்சம் ஏற்படும் போதோ மின்னல் தாக்குவதற்கான அறிகுறிகளாகும். எனவே அச்சமயம் தரையில் உடனடியாக அமர்ந்திட வேண்டும் எனவும், இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலிகளையும் கண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றிடவும் பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I.A.S. அவர்கள் கேட்டுக் கொள்கிறார்;.
0
Leave a Reply