விருதுநகர் மாவட்டம் நான் முதல்வன் திட்டம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டம் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், 12 ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும்100 சதவிகிதம் உயர்கல்வி சேர்க்கை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்;ளி தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I.A.S.,அவர்கள் தலைமையில்(30.04.2024)நடைபெற்றது.தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும், மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் வழங்க தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும்புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ளபயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்தும், அரசு பள்ளி பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வியில்7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்தும், அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்தும் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.உயர்கல்விக்கு செல்லாததற்கு மாணவர்களிடையே ஆர்வமின்மையும் ஒரு காரணமாக உள்ளது. இது குறித்து மாணவர்களிடையே எடுத்துக்கூறி அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகமாக கடந்த கல்வியாண்டு விருதுநகர் மாவட்டத்தில்97 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கை பெறுள்ளனர்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை நடப்புக் கல்வியாண்டில் அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த67 தலைமையாசிரியர்கள்;, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply