25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வாக்களிக்க எந்த வேட்பாளரிடமிருந்தும் பணமோ, அல்லது பரிசு பொருட்களோ பெறாமல் கண்ணியமாக வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கு பெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்களிக்க எந்த வேட்பாளரிடமிருந்தும் பணமோ, அல்லது பரிசு பொருட்களோ பெறாமல் கண்ணியமாக வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கு பெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதையொட்டி, 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களிடையேயும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க எந்த வேட்பாளரிடமிருந்தும் பணமோ அல்லது பரிசு பொருட்களோ பெறாமல் கண்ணியமாக வாக்களிப்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணிகள், கையெழுத்து இயக்கம் மற்றும் ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி,  விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று  வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திருநங்கை வாக்காளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

பின்னர், நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், சுமார் 100-க்கும் மேற்பட்ட திருநங்கை வாக்காளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும்.  ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம்  வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், தேர்தல் பிரிவு அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News