சுகமான தூக்கம் வேண்டுமா?.
முதுமையில் ஒருவருக்கு இரவில் தூக்கம் குறைந்தாலும், தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை.
தூக்கம் என்பதுஒவ்வொருவருடைய உடல்நலம் மற்றும் மனநிலையைப் பொறுத்ததே. ஆனால், முதுமையில் தூக்கம் சற்றுக் குறைவது உண்மையே. தூக்கத்தின் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபட்டு இருக்கும். முதுமையில் சுமார்5-8 மணி நேரத் தூக்கம் போதுமானதே.
புதிய ஆய்வின்படி, முதுமைக் காலத்தில் குறைந்த தூக்கம் போதுமென்ற கருத்தை மருத்துவ விஞ்ஞானிகள் மறுத்திருக்கிறார்கள். அதாவது, முதுமைக் காலத்தில் ஒருவர் பகலில் செய்யும் வேலையைப் பொறுத்தே அவருடைய தூக்கம் அமைகிறது. பகலில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு அதிக நேரம் ஆழ்ந்த தூக்கம் தேவைப்படுகிறது. மாறாக, பகல் முழுவதும் படுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இரவில் குறைவான தூக்கமே போதுமானது.
தூக்கம் குறைவதால் ஏற்படும் விளைவுகள்:
உடல் சோர்வு,பசி குறைதல்,எடை குறைதல்,தலைவலி, தலை பாரம்,பகலில் எரிச்சல்.
நல்ல தூக்கத்துக்கான வழிமுறைகள்
1. பகலில் தூக்கம் 30-40 நிமிடங்கள் மட்டுமே,
2. மாலையில் உடற்பயிற்சி செய்தல்,
3. தூக்கத்தைக் கெடுக்கும் மருந்துகளைத் " தவிர்த்தல் அல்லது மாலையிலேயே எடுத்துக்கொள்ளுதல்.
4. இரவு 8.00 மணிக்கு மேல் காபி, மது, *புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்.
5. படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்தல்.
6. வெதுவெதுப்பான பால் அருந்துதல்.
7. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்லுதல்.
8.படுக்கை அறையை அமைதியான, மங்கலான சூழலில் வைத்திருத்தல்'.
9. படுக்கை அறையில், தொலைக்காட்சி பார்த்தல், படித்தல், வானொலி கேட்டல் போன்றவற்றைத் தவிர்த்தல்.
10. தூக்கம் வராவிட்டால், படுக்கையிலிருந்து எழுந்து சிறிது நேரம் நடத்தல் அல்லது வேறு அமைதியான செயல்களில் ஈடுபடுதல்.
11. மன அமைதிக்காக தியானம் செய்தல்.
தூக்க மாத்திரை பற்றிய எச்சரிக்கை - தூக்க மாத்திரை ஒரு நிரந்தரத் தீர்வல்ல.
அதன் தீமைகள்
உடலுக்குக் கேடு விளைவித்தல்.
மருந்தின் வீரியம் குறைதல் மற்றும் அளவு அதிகரித்தல்.
திடீரென நிறுத்துவதால் தூக்கம் பாதிக்கப்படுதல்.
ஞாபக சக்தி குறைதல்.
உடல் தடுமாற்றம் மற்றும் விழும் அபாயம் பகலில் மயக்க நிலை.
மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.'
மகிழ்ச்சியான வாழ்வுக்கு நல்ல தூக்கம் அவசியம்.
0
Leave a Reply