இந்தியா 'ஏ' அணி அபார வெற்றி! நேபாளத்தை 306 ரன்னில் வீழ்த்தியது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், இந்தியா 'ஏ' அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் இந்தியா 'ஏ', இலங்கை 'ஏ', வங்கதேசம் 'ஏ' உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நேபாள அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நேபாள அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 11.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 'ஏ' அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply