25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


வெயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெயில்.

அனைவருக்கும் நாம் கண்கூடாக காணும் ஒரே கடவுள் சூரியன். சூரியனின் ஒளியும், வெப்பமும் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது. சூரியனின் ஒளிக்கதிர்கள் சமச்சீரான் வெப்பத்தை வெளியேற்றும்போது சௌகரியமாகவே இருக்கிறது. விலை பொருட்களும் இதமாகவே இருக்கிறது. ஆனால் அதனுடைய உக்கிரம் அதிகமாக அதிகமாக நமக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் தாங்க முடியாததாகி தாகி விடுகின்றது.

வெயில் அதிகமாக அடிக்கும் இந்த நேரத்தில் நம் உடம்பிலும் சூடு அதிகமாகவே ஏறுகின்றது. இதைத் தவிர்க்க சரியான முறையில் நாம் சிலவற்றை கடைபிடித்தால் இந்த சூடிலிருந்து தப்பிக்க முடியும்.

1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. வெளியே வெயிலில் செல்லும்பொழுது கூலிங் க்ளாஸ் அணிந்து கொள்வது அவசியம்.

3. மதியம் 12 to 2 மணி வரை வெயிலின் சூடு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

4. கடையில் காபி, பரோட்டா சாப்பிடுவதைத் தவிர்த்து பழவகை ஜுஸ்களை சாப்பிடவும்.

5. வெயிலில் செல்லும் பொழுது ஒவ்வொரு 25 நிமிடத்திற்கு ஒரு 5 நிமிடம் மர நிழலிலோ அல்லது வேறு எங்கேனும் ஓய்வு எடுக்கலாம். 

6. குடை எடுத்துச் செல்லலாம்,Cap போட்டுக் கொள்ளலாம்.

7. வியர்க்குரு வருவதற்கு முன்பே Prickly Heat பவுடரை போடவேண்டும். வியர்குரு வந்தபின் டாக்டரிம் காண்பித்து லோஸன் வாங்கித் தடவிக்கொள்ளவும்.

8. வெயிலில் செல்வதற்கு முன் தரமான Sun Screen Lotion 2 மணி நேரத்திற்கு முன் மேலே தடவிக் கொள்ளவும்.

9. கண்டிப்பாக பருத்தி ஆடைகளையே அணியவேண்டும். பருத்தியிலான ஆடைகளுக்கு வியர்வையை உறுஞ்சும்

தன்மை இருப்பதால் அதை அணிவது மிகவும் நல்லது. 

10. நாள் ஒன்றுக்கு இரண்டு தடவையாவது குளிக்க வேண்டும்.

11. 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை இளவறுப்பாக வறுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 1 1/2 டம்ளர் ஆக வற்றியவுடன் அந்தத் தண்ணீரை பருகுவது நல்லது. சீர்+அகம் = நம்முடைய அகத்தை சீர் செய்யும் சீரகத்தை 

கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

12.  60, 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு sun stroke வருவதற்கு வெயில்காலத்தில் நிறையவே உண்டு. இதனால்  பாதிக்கப்பட்டவர்கள், தலைவலி, வாந்தி, மயக்கம் ஆகியவற்றிற்கு உட்படுவார்கள். உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். 

13. தண்ணீர் தாகத்தில் கடகடவென்று குடிக்காமல் கொஞ்சம், கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

14. வெயிலில் செல்லும்போது கையில்  பாட்டிலுடன் செல்லவும். 

15. நீராகாரம், மோர் குடிப்பதும் மிகவும் நல்லது. 

        குணா பாஸ்கர் ராஜா.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News