உங்கள் டூத் பிரஷ்ஷில் கேமரா இருந்தால் எப்படி இருக்கும்?
பல் துலக்கும் முறையையே தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வகையில், கேமரா மற்றும் AI வசதியுடன் கூடிய புதிய டூத் பிரஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Dyson நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய AI டூத் பிரஷ்ஷில் சிறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் பற்களின் நிலையை கண்காணித்து, கறைகள் மற்றும் சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகளை அடையாளம் காணும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரத்யேக ஜெல்லை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனுடன் டூத் பிரஷ்ஷை இணைப்பதன் மூலம், பயனர்கள் தங்களது பற்களின் நிலையை விரிவாகக் கண்காணிக்க முடியும் என்பதும் இதன் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.
சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய இந்த தொழில்நுட்ப டூத் பிரஷ்ஷின் விலை சுமார் ₹47,000 முதல் தொடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply