₹73 கோடியில் நொய்யல் ஆற்றுக்கு புதிய முகம்!
கோவை மாநகரில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.73 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நடைபயிற்சிப் பாதை, மிதிவண்டிப் பாதை, சைக்கிள் நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் ஓய்வெடுக்க மர இருக்கைகள் மற்றும் ஆற்றின் அழகைக் கண்டு ரசிக்க பிரத்யேக பார்வை மேடை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், இரவு நேரங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சூரிய மின்சக்தியில் இயங்கும் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதனுடன் 2 பெரிய பாலங்கள், 2 சிறிய பாலங்கள் மற்றும் ஆற்றில் குப்பைகள் தேங்குவதைத் தடுக்கும் வகையில் 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், நொய்யல் ஆற்றங்கரை கோவை மக்களுக்கான Walking, Cycling & Leisure Space ஆக புதிய பரிமாணம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply