25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


வெண் தொண்டை மீன்கொத்தி  பறவை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெண் தொண்டை மீன்கொத்தி  பறவை.

வெண் தொண்டை மீன்கொத்தி, தனித்துவ அழகுள்ள பறவையினங்களில் ஒன்று .வயல்வெளி, காட்டுப்பகுதி என எங்கும் வசிக்கும். இவை பளபளக்கும் நீல இறகுகள் உடையது. பழுப்பு நிற மார்பு, வெண் தொண்டை மற்றும் செந்நிற அலகு சிறப்பான தோற்றம் தரும். நீல இறகு, தெளிந்த வானத்தையும், மார்பில் பழுப்பு நிறம் மண்ணை பிரதிபலிக்கிறது. இவை இயற்கையுடன் இணைப்பை வெளிப்படுத்தும்.

மீன்களோடு பூச்சி, பல்லி, தவளை, சிறு பாம்புகளை உண்ணும். மரக்கிளையில் அமர்ந்து, கூர்மை பார்வையுடன் கண்காணித்து, திடீரென நீரில் மூழ்கி மீனை பிடிக்கும். இதன் வேட்டைத் திறன் வியப்பு ஏற்படுத்தும். தனித்துவக் குரலில் பாடும். ஆண்டு முழுதும் இனப்பெருக்கம் செய்யும். மரம், மண் பொந்தில் கூடு கட்டி, ஏழு முட்டைகள் வரை இடும். இந்த பறவையினம் தெற்காசியா முதல் மத்திய கிழக்கு வரை பரவியுள்ளது. இந்தியாவில் பல்லுயிர் பெருக்க மகத்துவத்தை உணர வைக்கும் உயிரனங்களில் ஒன்றாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News