விம்பிள்டன்: ஜெசிகா, பென்சிக் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மற்றும் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் டார்ஜா விட்மனோவாவை 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் பெலிண்டா பென்சிக், பிரிட்டனின் மிகாஸ்டோஜ் சாவ்ல்ஜெவிக்கை 6-2, 6-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார்.
மேலும், லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, சீனாவின் ஜின்யு வாங், ஜெர்மனியின் மரியா டாட்ஜனா மற்றும் அமெரிக்காவின் இவா ஜோவிச் ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
அதேவேளை, கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு, சீனாவின் ஷுவாய் ஜாங்கிடம் 6-7, 6-7 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் அமெரிக்காவின் டாமி பால், பிரான்சின் அலெக்சாண்டர் முல்லரை 6-1, 6-2, 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply