இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடும்"சுதந்திர தினவிழா"
நூற்றாண்டு கண்ட இராஜபாளையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விழா
(REWA வின் 49வது நிகழ்ச்சி)
நாள் : 15-08-2026 சனிக்கிழமை
நேரம் : காலை 10-00 மணி
இடம் :
மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்
சிறப்புரை :
Dr.V. வெங்கட்ராமன் அவர்கள்
முன்னாள் முதல்வர். இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி.
விழா பேருரை :
Dr.V. ரகுபதி அவர்கள்
தலைவர், காந்திநிகேதன் ஆஸ்ரமம், T. கல்லுப்பட்டி.
சுதந்திரப் போராட்டத்தில் இராஜபாளையத்தின் பங்கு ஆர்பரியதாக இருந்திருக்கிறது. பிரிட்டீஷாரே பயப்படும் அளவிற்கு தீவிரமாக அனைத்து போராட்டங்களும் 1905 வங்காள பிரிவினை முதல் 1947 சுதந்திரம் கிடைக்கும் வரை சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அன்னியநாட்டு துணிகளை புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், மது எதிர்ப்பு பிரச்சாரம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, போன்ற போராட்டங்கள் நடத்தி, பிரிட்டீஷ் காவல்துறை இரண்டுமுறை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு சாதி, மத, அரசியல் சாயம் சிறிதும் இல்லாமல் பூர்ண சுவராஜ் என்ற இலக்கை நோக்கி நூற்றுக்கணக்கான தியாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.
பிரிட்டீஷாரே நமது இராஜபாளையத்தை பயங்கர நகரம் (Dangerous Town) என்று பதிவிடும் அளவிற்கு ஒற்றுமையாக அனைவரும் போராடி உள்ளனர்.
0
Leave a Reply