100% மானியத்தில் உயர் ரக பருப்பு விதை உற்பத்தி மற்றும் கொள்முதல் செயல் விளக்கத்திடல் அமைத்திட வருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பருப்பு வகைகளில் முழுமையான தன்னிறைவு அடைவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசின் மூலம் ஆத்மநிர்பர்தாவிற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருப்பு வகைகளின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு வேளாண்மையின் மூலம் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
2025 – 26 முதல் 2030 – 31 வரை பயறு உற்பத்தி அதிகரிப்பு பயறு வகை சாகுபடி பரப்பு விரிவாக்கம் போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்காக இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்திற்கு உளுந்து மற்றும் பாசிபயறு வகைகளில் இத்திட்டம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய கூறான சான்று விதை விநியோகம் (8 ஆண்டுகளுக்கு உட்பட்டது) மூலம் குவிண்டாலுக்கு ரூ.6,000/- வீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு 400 குவிண்டால் உயர்ரக விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரூ.10,000/- மதிப்புள்ள செயல்விளக்க திடல் அமைப்பதற்கு தேவையான இடுபொருட்கள் (விதை, உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், Pulse wonder, பயிர் பாதுகாப்பு மருந்துகள்) விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
எனவே, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்தோ அல்லது தங்கள் பகுதி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டும் பயன் பெறலாம். அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற்று பயறு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply