25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026 விழிப்புணர்வுப் பேரணி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026 விழிப்புணர்வுப் பேரணி.

விருதுநகர் மாவட்டம், மாரியம்மன் கோவில் திடலில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினம்-2026-னை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

 புகையிலை நுகர்வினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 இத்தினம், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கவும், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் வழிவகுக்கிறது.

 ஏற்கப்பட்ட விழிப்புணர்வு உறுதிமொழி:

 அதன் ஒரு பகுதியாக, "இன்றைய தினம் நான் ஒருபோதும் புகைபிடிக்கவோ அல்லது புகையிலைப்பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன் என்றும், அவ்வாறு புகைபிடிப்பதற்கு அல்லது புகையிலைப் பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்வதற்கு என்னுடைய உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ ஊக்குவிக்க மாட்டேன் என்றும்

 நான் என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களைப் புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும், மேலும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதினால் ஏற்படும் மாசிலிருந்து எனது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பங்களிப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்" என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க, அனைவரும் அதனை ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

 விழிப்புணர்வுப் பேரணி:

 இதனைத் தொடர்ந்து, மாரியம்மன் கோவில் திடலில் தொடங்கிப் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைக்க, மருத்துவப் பணியாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 இந்நிகழ்வில், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) திரு.செந்தில் குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. யசோதாமணி, மருத்துவத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News