25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,தேர்தல் கல்வி அறிவுக் குழு(ELC) கூட்டம் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,தேர்தல் கல்வி அறிவுக் குழு(ELC) கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் கல்வி அறிவுக் குழு கலந்தாய்வுக் கூட்டம் (15.09.2026) நடைபெற்றது.தேர்தல் கல்வியறிவு குழு(ELC) என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு சிறப்பு முயற்சியாகும். இது மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பயிற்சிகள் மூலம் தேர்தல் உரிமைகளை அறிந்து கொள்ளவும் வாக்குப்பதிவு மற்றும் வாக்களிக்கும் முறைகளை எளிதாக புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

நேர்மையான மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய வாக்களிப்பில் வாக்காளர்களை பங்கேற்க செய்தல், தேர்தல் உரிமைகள் மற்றும் வாக்காளர் பதிவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே மாணவர்களைப் பொறுப்புள்ள வாக்காளர்களாக தயார்படுத்துதல், ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்ளச் செய்தல் ஆகியவை தேர்தல் கல்வியறிவு குழுவின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

அதன்படி, இந்த குழுக்கள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவுகள், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் செயல் விளக்கங்கள், வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு விவாதங்கள், போட்டிகள், இளையோர் நாடாளுமன்றம் உள்ளிட்டவை  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தேர்தல் கல்வி அறிவுக் குழுவில் உறுப்பினர்களை சேர்த்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் தேர்தல் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்வதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, கல்வி அறிவு குழு ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News