உலக அலைச்சறுக்கு போட்டி: இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
மாமல்லபுரம்: உலக அலைச்சறுக்கு (Surfing) லீக் மற்றும் இந்திய அலைச்சறுக்கு சங்கம் இணைந்து நடத்தும் 'ஷோர் டெம்பிள் கிளாஸ் 2000' மற்றும் 'QS புரோ ஜூனியர்' அலைச்சறுக்கு போட்டிகள் சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று தொடங்கின. இதில் 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாள் ஆட்டம்: ஆண்கள் QS 2000 பிரிவில் ஜப்பானின் கீனு கமியாமா 13.67 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
இந்திய வீரர்களின் சாதனை: இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனசேகரன் 9.63 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அவருடன் சேர்ந்து இந்திய வீரர்களான ரூபன் வாசு, பிரவீன் ரத்தோட், நிதிஷ் வருண், ஹரிஷ் முத்து, சஞ்சய் செல்வமணி, டாயின் அருண் மற்றும் அஜீஷ் அலி ஆகியோரும் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
0
Leave a Reply