25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


விருதுநகர் மாவட்டம் புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை(Aadhaar Seva Kendra) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை(Aadhaar Seva Kendra) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில்(தேவகி ஸ்கேன் மையம் அருகில்) புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை(Aadhaar Seva Kendra) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி அதன் செயல்பாட்டை பொதுமக்களின் சேவைக்காக தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. அரசு நலத்திட்ட உதவிகள், கல்வி, வங்கிச் சேவைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் தொடர்பான விவரங்கள் சரியாகவும், புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் இருப்பது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களது ஆதார் தொடர்பான சேவைகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெறும் வகையில் புதிய ஆதார் சேவை மையம் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய ஆதார் சேவை மையத்தில், பொதுமக்களுக்கு பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் புதுப்பித்தல், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மாற்றம், புகைப்படம், கைரேகை, கருவிழி ஸ்கேன் உள்ளிட்ட பயோமெட்ரிக் புதுப்பிப்பு, ஆதார் அட்டை பதிவிறக்கம் மற்றும் அச்சுப் பிரதியைப் பெறுதல், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு மற்றும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதார் சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் தங்களது ஆதார் தொடர்பான பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் உரிய வழிகாட்டுதலுடன் சேவைகளைப் பெறும் வகையில் இந்த சேவை மையம் செயல்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த புதிய நவீன ஆதார் சேவை மையத்தினை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான ஆதார் தொடர்பான சேவைகளைப் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்வின் போது, ஆதார் சேவை மைய மேலாளர் திரு.பூபதி ராஜா, பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News