உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் கிரிக்கெட்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இதன் 2023-25 சீசனுக்கான புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடம்பிடித்த தென் ஆப்ரிக்கா (69.44 சதவீதம்), ஆஸ்திரேலியா (67.54) அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்திய அணி (50.00) மூன்றாவது இடம் பிடித்து வெளியேறியது.
இங்கிலாந்தின் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று பைனல் துவங்குகிறது. பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 30.78 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. தோற்கும் அணிக்கு ரூ.18 கோடி தரப்பட உள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி,
டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணாகல் லுாரி மைதானத்தில் நேற்று நடந்த திருச்சி, சேலம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி 'பீல் டிங்' தேர்வு செய்தது.சேலம் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. திருச்சி அணி 20 ஓவரில் 172/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply