25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம் அஞ்சலகங்களில் குறைவான தவணைதொகைளை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB) மூலம் அஞ்சலகங்களில் குறைவான தவணைதொகைளை செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520/, ரூ.555/, ரூ.755/, பீரீமியத்தில் ரூ.10 இலட்சம்  அல்லது ரூ.15 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள அஞ்சலங்கள் (தபால்காரர்/கிராம அஞ்சல் ஊழியர்கள்) மூலம் மிககுறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள/முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்த விதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த காப்பீட்டில் சேர்ந்து கொள்ளலாம். சேமிப்பு கணக்கு துவங்க ஆதார் எண், தொலைபேசி எண், ரூ.200 ஆகியவை போதுமானது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
 ரூ.10.00 இலட்சம் / ரூ.15.00 இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு / நிரந்தர முழு ஊனம் / நிரந்தர பகுதி ஊனம்)
 ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
 தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி
 விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை
 விபத்தினால் மரணம் /  நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை
 விபத்தினால் மரணம் / நிரந்தர முழு ஊனம்/நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.1,00,000/- வரை

 விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000/- வீதம் 15 நாட்களுக்கு  ( 2 நாட்கள் கழிக்கப்படும்)
 விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை.

  மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் (வாகன விபத்து மட்டுமன்றி இடி, மின்னல் தாக்குதல், பாம்பு போன்ற விஷ பூச்சி கடி, தவறி விழுதல்) ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும்/ நிதி நெருக்கடிகளையும்/ உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் / தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பிற காப்பீடு திட்டம் வைத்திருப்பவர்களும், இந்த காப்பீட்டில் பதிவு செய்துகொள்ளலாம் தொழிலதிபர்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை இந்த எளிய திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் நிறுவனம் மற்றும் ஊழியர்களும் பயன்பெற முடியும்., இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் மூலம் டேர்ம் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் உத்திரவாதத்துடன் கூடிய பென்ஷன் திட்டம், முதிர்வு திட்டத்திலும் பொது மக்கள் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News