ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி செயற்கைக்கோள் இணைய சேவை: Starlink மீண்டும் விண்ணப்பம்!
ஸ்மார்ட்போன்களுக்கு செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இணைய சேவையை வழங்கும் Gen 2 D2D (Direct-to-Device) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்காக, ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி Starlink நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சில தொழில்நுட்ப மற்றும் ஸ்பெக்ட்ரம் விதிமுறைகள் தொடர்பான காரணங்களால் ஏற்கப்படாத நிலையில், தற்போது புதிய விண்ணப்பத்தை Starlink சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பிரத்யேக செயற்கைக்கோள் சாதனங்கள் இல்லாமலேயே, குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள் மூலம் செயற்கைக்கோள் இணைப்பைப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகலாம்.
0
Leave a Reply