அடைக்கு அரைக்கும் போது ஊறவைத்த பட்டாணியையும் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்தால், அடை மிகவும் ருசியாக இருக்கும்.
பிரியாணி செய்ய இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது, அதில் 4 முந்திரி பருப்பு, 1/2 கைப்பிடி புதினா, 1 பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து போட்டு பிரியாணி செய்து பாருங்கள். சுவை கூடுதலாக கிடைக்கும்.
பிரியாணி செய்யும் போது தண்ணீர் பாதியும், மீதி தேங்காய் பால் மற்றும் தயிர் ஒரு கப் சேர்த்து செய்தால் பிரியாணி சுவையாக இருக்கும்.
அடைக்கு அரைக்கும் போது ஊறவைத்த பட்டாணியையும் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்தால், அடை மிகவும் ருசியாக இருக்கும்.
கல் உப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் நைசாக தூள் உப்பு கிடைக்கும்
தாளிப்பு வடகம் தயார் செய்யும் போது அளவாக விளக்கெண்ணெய் சேர்த்தால் போதுமானது அதிகம் சேர்த்தால் தாளிக்கும் போது எண்ணெய் வாசனை அதிகமாக இருக்கும் (அனைத்து சமையலுக்கும் நன்றாக இருக்காது.)
0
Leave a Reply