கோதுமை அல்லது ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால்...
மாவு அரைக்கும் போது சிறிதளவு வடித்த சாதம் சேர்த்து அரைத்தால், இட்லியும் தோசையும் பஞ்சு போல மென்மையாக வரும்.
பூரி மாவு பிசையும் போது 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், பூரி நல்ல நிறத்துடன் நீண்ட நேரம் உப்பி இருக்கும்.
மீல்மேக்கர் கிரேவியில் உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
கோதுமை அல்லது ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால், உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
பாசிப்பருப்பு, துவரம் பருப்பை லேசாக வறுத்து வேகவைத்து சாம்பார் செய்தால், சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும்.
0
Leave a Reply