பெங்களூரில் விமான டிக்கெட்டுக்கு நிகரான டாக்சி கட்டணம்
சில நேரங்களில் விமான போக்குவரத்து கட்டணம் என்பது டிமாண்டை பொறுத்து அதிகரிப்பது, குறைவதுமாக இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கும்.\ஆனால் வாரத்தின் சில நாட்களில் விமான கட்டணங்கள் என்பது நாம் எதிர்பாராத அளவு மிகக்குறைவாக இருக்கும். அப்படி குறைந்த டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு பேரிடியாக விழுந்துள்ளது வாடகை கார்கட்டணம்..மானஸ்வி சர்மா என்பவர் புனேவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். விமான நிலையம் வந்திறங்கிய அவர் வீட்டுக்கு செல்வதற்காக ஊபர் தளத்தில் வாடகை கார் பதிவு செய்துள்ளார்
அப்போது வாடகை காருக்கு ஆகும் கட்டணம் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிட்டதட்ட விமான கட்டணத்துக்கு நிகரான வாடகை கார் கட்டணம் இருந்ததை கண்டு ஷாக்கான அவர் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மானஸ்வி சர்மா புனேவில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 3,500 ரூபாய்க்கு டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்ல ஊபர் வாடகை காரை பதிவு செய்த போது அதில் 2,000 ரூபாய் கட்டணமாக காட்டியுள்ளதுஅந்த ஸ்கிரீன் ஷாட்டை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் புனேவிலிருந்து பெங்களூரு வருவதற்கு 3,500 ரூபாய் தான் கட்டணம் செலுத்தினேன், ஆனால் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து என்னுடைய வீட்டிற்கு செல்வதற்கு 2,000 ரூபாய் நான் செலுத்த வேண்டி இருக்கிறது என பதிவிட்டு இருந்தார்.
அவரது இந்த பதிவு எக்ஸ் தள பயன்பாட்டாளர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் மாற்று வழிகளில் வீட்டிற்கு செல்ல முயற்சி செய்து இருக்கலாமே என்ற யோசனைகளை வழங்கியுள்ளனர். பேருந்துகளை பயன்படுத்தி இருக்கலாமே அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அழைத்திருந்தால் அவர்கள் நிச்சயமாக 2000 ரூபாய்க்கு கீழேதான் கேட்டிருப்பார்கள் என ஒருவர் கூறியுள்ளார்.அதே வேளையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்தும் பலர் புலம்பியுள்ளனர். பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நகருக்குள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வது என்பது மிக மோசமான ஒரு அனுபவமாக மாறி வருகிறது எனக் கூறியுள்ளனர்.
0
Leave a Reply